இடைத் தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்தததற்கு தவெக மீதான அதிருப்தியே காரணம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
எஸ்ஐஆர் நடைமுறைக்குப் பிறகுதான் கர்நாடகம் மற்றும் கேரளத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. எஸ்ஐஆர் பாஜகவுக்கு சாதகமாக இருந்திருந்தால், நாங்கள் தானே ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும்? கேரள அமைச்சர் ரமேஷ் சென்னிதலா போன்றவர்கள் எஸ்ஐஆர் நடைமுறை நல்லது எனக் கூறியுள்ளனர்.தாராபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் வாக்கு சதவீதம் குறைந்திருப்பது, தவெக மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்திக்கான அறிகுறி. தமிழகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. ஜிஎஸ்டி வருவாய் குறைந்து கொண்டே செல்கிறது. குஜராத், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வரி வருவாய் கூடிக்கொண்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் கடன் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் நாள்தோறும் 2 முதல் 3 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. குடிநீர் பிரச்சினை வரப்போகிறது. இதற்குத் தீர்வுகாண எந்த திட்டமும் இல்லை. ஆய்வுக் கூட்டங்களும் நடைபெறுவதில்லை. கடந்த ஆட்சியில் ஆற்று மணல் குவாரிகளில் நடந்த ஊழல் குறித்து அமலாக்கத் துறை தற்போது விசாரணையை தொடங்கியுள்ளது.
கடந்த 149 நாட்களில் 500-க்கும் மேற்பட்ட குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலின்போது முதல்வர் விஜய் 7 பிரச்சாரம் செய்தார். இந்த முறை ஒரே ஒரு கிராமத்தில் 39 இடங்களில் பிரச்சாரம் செய்துள்ளார். அவரது மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மக்களுக்கு சேவை செய்யும் எண்ணத்தை அவர் மறந்துவிட்டார். தூய சக்தி, தீய சக்தி என்று பேசிய கம்யூனிஸ்ட் கட்சியினரே, இன்றைக்கு 'கரப்ஷன் சக்தி' என்று கூறுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.